Thursday 24 May 2018

அமைச்சர்களின் சம்பளம் 10% குறைக்கப்பட்டது- பிரதமர் மகாதீர்

புத்ராஜெயா-
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு குறைக்கப்படுவதாக பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவித்தார்.
நாட்டின் நிதிச் சுமையை சமாளிக்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் அரசு இத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

10 விழுக்காடு சம்பளம் குறைக்கப்படுவதற்கு அமைச்சர்கள் இணக்கம் கண்டுள்ளனர் என தெரிவித்த துன் மகாதீர், இந்த குறைப்பு அடிப்படைச் சம்பளத்தை சார்ந்துள்ளது என்றார்.

இப்போது அமைச்சர்களின் சம்பளத்தை விட சில அரசு அதிகார்களின் அடிப்படைச் சம்பளம் கூடுதலாக உள்ளது.
தற்போது வரை ஊழியர்களுக்கு சமபள உயர்வு வழங்க அமைச்சரவை பரிந்துரையை முன்வைக்கவில்லை.

1981ஆம் ஆண்டு தாம் முதன் முதலாக பிரதமராக பதவியேற்றபோது அமைச்சர், அரசு உயர்நிலை அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்தேன்.

ஆனால் இப்போது நாட்டின் தலைமைச் செயலாளர் போன்ற அரசு அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்கவில்லை. அது அவர்களின் தனி விருப்பத்தை பொறுத்தது.

நாட்டின் கடன் சுமையை குறைக்க  அவர்கள் முன் வரலாம், ஆனால் அவர்களை நாம் கட்டாயப்படுத்த போவதில்லை என துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment