புனிதா சுகுமாறன்
சுங்காய்-
சுங்காய் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோ வ.இளங்கோ வெற்றி பெற்றால் ஆட்சிக்குழு உறுப்பினர் (Exco) பதவி உறுதி என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறினார்.
கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கும் இத்தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்க வேண்டும். அதற்கு டத்தோ இளங்கோவுக்கு இங்குள்ள மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
டத்தோ இளங்கோ சிறந்த ஒரு சேவையாளர் ஆவார். ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் இத்தேர்தலில் அத்தொகுதியை மீண்டும் இழந்து விடக்கூடாது என்பதற்காக அதனை அம்னோ கையகப்படுத்தியுள்ளது.
இளங்கோவின் சேவைக்கு மதிப்பளித்தே மசீச வசமாக இருந்த இத்தொகுதியை பேசி இங்கு மஇகா போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
இத்தேர்தலில் டத்தோ இளங்கோ வெற்றி பெற்றால் நிச்சயம் அவருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என இன்று சுங்காய் வட்டாரத்தில் பொது மண்டப நிர்மாணிப்புப் பணியை தொடக்கி வைத்தபோது டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment