Friday 4 May 2018

'மக்கள் கிட்ட மாற்றம் வந்துருக்கு; கண்டிப்பா ஜெயிக்கிறோம்' - டத்தோஶ்ரீ தேவமணி



ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள மனமாற்றம் நிச்சயம் எனக்கு வெற்றியை கொடுக்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என சுங்கை சிப்புட் தேசிய முன்னணி வேட்பாளர்  டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வசமான இத்தொகுதியில் இதுவரை எவ்வித மேம்பாடும் காணப்படாதது மக்களிடையே ஓர் அதிருப்தி அலையை உருவாக்கி உள்ளது.

2008இல் மக்கள் எதிர்க்கட்சியை ஆதரித்த நிலையில் தற்போது அவர்களிடத்தில் மனமாற்றம் வந்துள்ளது. தேசிய முன்னணிக்கு ஆதரவாக அவர்கள் திரும்பிக் கொண்டிருப்பதால் தேசிய முன்னணி வெற்றி நிச்சயமாக்கப்பட்டு வருகிறது என டத்தோஶ்ரீ தேவமணி கூறினார்.

2013இல் இங்கு போட்டியிட்டு தோல்வியுற்ற போதிலும் மக்களுக்கான சேவைகள் வழங்குவதில் பின்வாங்கிடவில்லை. இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுதான் வந்துள்ளேன்.

ஆனால் அதை மறைமுகமாகவே செய்து வந்துள்ளதால் உண்மை நிலை அறியாமல் சிலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆயினும் மக்கள் தங்களின் பிரதிநிதியாக என்னை ஏற்க தொடங்கியுள்ளதால் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment