Thursday 3 May 2018

மக்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்; ஆனால்....? - டாக்டர் ஜெயகுமார்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு சிறப்பாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு தேசிய முன்னணிக்கு சாதகமாகவே கருதப்படுகிறது என இத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள டாக்டர் மைக்கல் ஜெயகுமார் மனம் திறந்தார்.

கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசம் இருந்த இத்தொகுதி தேசிய முன்னணி வசமாவதற்கு எதிர்க்கட்சியான நம்பிக்கைக் கூட்டணி வகுத்த தவறான திட்டமே ஆகும்.

தேசிய முன்னணியை எதிர்த்து பிகேஆர் கட்சியின் கீழ் போட்டியிட முனைந்த போதிலும் அதற்கு முரண்பாடான நடவடிக்கைகளால் இன்று சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணி வசமாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பிரச்சாரத்திற்கு செல்லும்போதெல்லாம் மக்கள் தனக்கு நல்ல முறையில் வரவேற்பு அளித்தாலும் எதிர்க்கட்சியின் சார்பில் பிஎஸ்எம் வேட்பாளராக நானும் பிகேஆர் வேட்பாளராக கேசவனும் களமிறங்குவதால் எதிர்க்கட்சியின் வாக்குகள் சிதறடிக்கப்படலாம்.

இந்த வாக்கு சிதறல்தான் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யக்கூடியது டாக்டர் ஜெயகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது இவ்வாறு கூறினார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணியும் பாஸ் கட்சியின் சார்பில்  டாக்டர் இஷாக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment