Thursday, 3 May 2018

'பெண்கள் என்றால் இளக்காரமா?' - சிவசுப்பிரமணியத்தை சாடினார் தங்கராணி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
"பெண்கள் என்றால் இளக்காரமா? ஏன் பெண்கள்  பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடாதா? என புந்தோங் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் திருமதி தி.தங்கராணி  அத்தொகுதி பிகேஆர் வேட்பாளரை காரசாரமாக கடிந்து கொண்டார்.

'புந்தோங் தொகுதியில் போட்டியிட ஓர் ஆண் வேட்பாளர் இல்லையா? பெண் வேட்பாளர் தான் கிடைத்தாரா?' என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பிரச்சார நிகழ்வொன்றில் பேசிய ஆதி. சிவசுப்பிரமணியத்தின்  பேச்சு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் சாதிக்கும்போது அரசியல் மட்டும் சாதிக்க முடியாது.

பெண் வேட்பாளர்களுக்கான 30 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.

ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட ஆண் வேட்பாளர்களே கிடைக்கவில்லையா? என பேசியுள்ள பிகேஆர் கட்சியின் புந்தோங் வேட்பாளர் ஆதி.சிவசுப்பிரமணியத்தின் பேச்சு நாட்டிலுள்ள பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இருக்கிறது.

'பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதை சிவசுப்பிரமணியம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் பேசும் போது குறைகளை சுட்டி காட்டலாம். ஆனால் பாலினத்தை சுட்டிக் காட்டி பெண்களை தரக்குறைவாக மதிப்பிடுவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது' என மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவியுமான தங்கராணி ஆவேசத்துடன் கூறினார்.

No comments:

Post a Comment