கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்குமானால் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) மீட்டுக் கொள்வதில் எவ்வித பயனும் இல்லை என்று தற்காப்பு முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வரும் நிலையில் அதனை காரணம் காட்டி எம்சிஓ முடிவுக்கு கொண்னு வரப்படலாம்.
ஆனால் அதன் பின்னர் அந்த வைரசினால் பாதிக்கப்படுவோரின் , எண்ணிக்கை அதகரிக்கத் தொடங்கினால் மீண்டும் தொடக்கக்கட்ட நிலையிலான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள வேண்டி வரும்.
மக்கள் தற்போது பொறுமை காக்க வேண்டும். எம்சிஓ நடைமுறைகளை பின்பற்றினாலே சுமூகமான நிலையில் அதனை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று அவர் சொன்னார்
No comments:
Post a Comment