Tuesday 9 July 2019

தங்கை, காதலனால் அண்ணன் கொலை- இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

தைப்பிங்-

தங்கை, அவளது காதலனால் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் 16 வயது இடைநிலைப்பள்ளி மாணவனின் இறுதி அஞ்சலியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இங்கு தாமான் கிளன்வியூ குடியிருப்புப் பகுதியில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட இளைஞனின் சடலம் இருப்பதை கண்ட குடியிருப்புவாசிகள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.

கடந்த 5ஆம் தேதி முதல் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட ஆடவனின் சடலம் தான் அது என்பதை உறுதிபடுத்திய போலீசார், சடலத்தை மீட்டதோடு இச்சம்பவம் தொடர்பில் அவ்விளைஞனின் 14 வயது சகோதரி, அவரின் 15 வயது காதலன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவ்விளைஞனின் இறுதிச் சடங்கு அவரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இவ்விளைஞனின் இறுதிச் சடங்கு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

No comments:

Post a Comment