Tuesday 2 July 2019

'கொலை' வெறியில் துரத்திய புலி; நூலிழையில் தப்பித்த ஆடவர்கள்

மைசூர்-
காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆடவர்களை 'கொலை' வெறியுடன் புலி ஒன்று துரத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர்- கொடகு பகுதிகளுக்கு நடுவே உள்ள ‘நகராஹோல்’ தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

புலிகளின் சரணாலயமாக கருதப்படும் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு ஆடவர்கள் பயணிக்கின்றனர். அப்போது திடீரென காட்டுப் பகுதியிலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி வரும் புலி இவர்களை துரத்துகிறது.

மோட்டார் சைக்கிளோட்டி தடுமாற்றத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்தவே வேகமாக ஓடிவரும் புலி காட்டின் மறுமுனையில் நுழைகிறது. இந்த காட்சி  அனைத்தையும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருக்கும்  நபர் காணொளியாக பதிவு செய்கிறார்.

கொலை வெறியோடு துரத்தும் புலியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கு இரு ஆடவர்களின் திக் திக் வினாடிகள் கொண்ட இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

No comments:

Post a Comment