Monday 15 July 2019

பிஎஸ்எம் கட்சியின் புதிய தேசியத் தலைவரானார் டாக்டர் ஜெயகுமார்

காஜாங்-
பிஎஸ்எம் கட்சியின் புதிய தேசியத் தலைவராக டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
காஜாங்கில் நடைபெற்ற இக்கட்சியின் 21ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெயகுமார் புதிய தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட வேளையில் துணைத் தலைவராக அருட்செல்வன், தேசிய பொதுச் செயலாளராக சிவராஜன், துணை பொதுச் செயலாளராக பவாணி, தேசிய பொருளாளராக சூக்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மக்களின் உரிமைக்காக பிஎஸ் எம் கட்சி தொடர்ந்து போராடும் எனவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஆயுத்தப் பணிகளில் இக்கட்சி முனைப்பு காட்டும் எனவும் டாக்டர் ஜெயகுமார், அருட்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.






 

No comments:

Post a Comment