பாடாங் ரெங்காஸ்-
டத்தோஸ்ரீ நஜிப் மீண்டும் பிரதமராகவே தற்போது தேசிய முன்னணியின் ஆலோசனை மன்றத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தேமு ஆலோசனை மன்றத்தின் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் உண்மையிலேயே தேமு தலைவராக நியமியக்கப்படவே அவர் கேட்டுக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். பாஸ் கட்சியுடன் தற்போது இணைந்துள்ளதால் அது பிரகாசமான சூழலை உருவாக்கியுள்ளது.
'மீண்டும் பிரதமராக ஆசைப்படுகிறீர்களா?இளையவர்களுக்கு, புதிய தலைவர்களுக்கு வாய்ப்பை கொடுங்கள், போதும்' என்று பாடாங் ரெங்காஸ் தொகுதி அம்னோ மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில அவர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment