நாட்டை 15 மாதகாலமாக பக்காத்தான்
ஹராப்பான் ஆட்சி செய்து வந்தாலும் கூட 1எம்டிபி மீது குறை காண்பதிலேயே குறியாக உள்ளது
என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் கடன் வெ.3,220 கோடி
அதிகரித்திருப்பதற்கு 1எம்டிபி தான் காரணம் என அரசு கூறுவது ஏற்புடையதல்ல.
நாட்டின் கடன் 2017இல்
68,680 கோடி வெள்ளியாகவும் 2018இல் அது 74,100 கோடி வெள்ளியாக அதிகரித்ததற்கு 1எம்டிபியின்
திட்டமிடப்படாத முதலீடுகளும் நிதிமுறைகேடும் தான் காரணம் என்று தொழில்துறை முன்னாள்
அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறிய கருத்துக்கு பதிலளித்த டத்தோஶ்ரீ நஜிப், 2016இல் நாட்டின்
கடன் அதிகரித்திருக்கவில்லை என்று கூறினார்.
நாட்டின் கடன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் அரசாங்கம், 1எம்டிபி
முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை மறந்து விடக்கூடாது என டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment