Thursday 11 July 2019

வீட்டுப் பணிப்பெண்ணுடன் பாலியல் வல்லுறவு; குற்றச்சாட்டை மறுத்தார் பவுல் யோங்

ஈப்போ-

தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் உறவு குற்றச்சாட்டை பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் மறுத்துள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்ணை தாம் கற்பழித்ததாக கூறப்படும் தகவல் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக  கூறிய அவர், இவ்விவகாரம் தொடர்பில் போலீசாரின் விசாரணைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் போலீசார் நிபுணத்துவத்தோடு செயல்படுவதோடு தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உண்மையை வெளிகொணர்வர் என்றும் அவர் சொன்னார்.

பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் தம்மை கற்பழித்ததாக இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் கடந்த திங்கட்கிழமை போலீஸ் புகார் செய்திருந்தது தொடர்பில் நேற்றிரவு போலீசார் பவுல் யோங்கிடம் விசாரணை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment