பள்ளி வளாகத்தில் மது அருந்தி
மயங்கி கிடந்ததாக தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த இடைநிலைப்பள்ளி மாணவர்,
‘கொக்கோ கோலா’ பானத்தில் மலிவு விலை சாராயம் கலக்கப்பட்டிருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை
என்று வீடியோ பதிவில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
தாம் இதுவரை மதுபானத்தை அருந்தியதில்லை
எனவும் இதுவே முதல் முறை என்பதால் ஆபத்தான நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். பள்ளி
மாணவர் எனும் நிலையில் மதுவை அருந்தக்கூடாது என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
நான் இப்போது நலமாக உள்ளேன்.
சிலர் வற்புறுத்தலாலேயே கொக்கோ கோலா பானத்தை அருந்திய தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்த
வேண்டாம். அது என் குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.
ஆதலால் பொய்யான தகவலை சமூக
ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அம்மாணவன் வீடியோ பதிவில் கேட்டுக்
கொண்டார். மாணவனின் தன்னிலை விளக்கம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
(குறிப்பு: மாணவரின் நலன் கருதி அவரின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.)
No comments:
Post a Comment