Saturday 5 May 2018

தீவிர பிரச்சாரத்திலும் மருத்துவம் - அதகளப்படுத்தும் டத்தோஶ்ரீ சுப்ரா



சிகாமாட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் தீவிர பிரச்சார பணியிலும் தனது மருத்துவத் தொழிலை மறக்காமல் மேற்கொள்கிறார் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம்.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், தாமான் வவாசானில் பசார் மாலாம் பகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டபோது  எதிரில் வந்த மலாய் வாக்காளர் ஒருவரின் முகத்தை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினார்.

டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் தோல் வியாதி துறையில் மருத்துவ நிபுணராக பணியாற்றிவர் என்பதோடு சுகாதார அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment