Sunday 6 May 2018

சாலாக் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடம் - பிரதமர் நஜிப் அறிவிப்பு


புனிதா சுகுமாறன், கோ.பத்மஜோதி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வென்றால்  சாலாக் தமிழ்ப்பள்ளி புதிய இடத்தில்  நிர்மாணிக்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

நீண்ட கால கோரிக்கையான சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு மக்கள் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மாற்றம் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் நிவர்த்தி காணவுள்ளது.
சுங்கை சிப்புட்டிற்கு இன்று வருகை புரிந்த டத்தோஶ்ரீ நஜிப் சுங்கை சிப்புட் வட்டார இந்தியர்களுக்கான அறிவித்த வாக்குறுதிகள் இது ஒன்றாகும்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கும் இத்தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் நிச்சயம் இப்பகுதி உருமாற்றம் காணும் எனவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.
தற்போது சாலாக் தோட்டத்தின் உட்புற சூழலில் அமைந்துள்ள இப்பள்ளிக்கூடம் மக்கள் அதிகம் உள்ள குடியிருப்புக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இப்பள்ளிக்கான புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிலம் அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment