கம்பார், மே 8-
பேரா, கம்பார் தேசிய முன்னணியின் பல வருட கோட்டையாக இருந்த
நாடாளுமன்றம் கடந்த தேர்தலில் படு தோல்வி கண்டது. அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு தேர்தலில் மீண்டும் கம்பார் நாடாளுமன்றத்தைக்
கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கடந்த தேர்தலில் தேசிய
முன்னணி வேட்பாளர் டத்தோ லீ சி லியோங்கை எதிர்த்து போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் டாக்டர்
கோ சொங் சென் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், இந்த தேர்தலில் மீண்டும் கம்பார் நாடாளுமன்றத்தில்
தேமு வேட்பாளராக டத்தோ லீ சி லீயோங் போட்டியிடுகிறார். அவரைத் எதிர்த்து நம்பிக்கை
கூட்டணி வேட்பாளராக தோமஸ் சூ போட்டியிடுகிறார். இவர் ஈப்போ தீமோர் நாடாளுமன்றத்திலிருந்து
கம்பார் நாடாளுமன்றத்திற்கு மாற்றலாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பார் நாடாளுமன்றத்தை
பொருத்தமட்டில் இம்முறை பலத்த போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதலால்
இம்முறையும் தேசிய முன்னணி இந்த நாடாளுமன்றத்தை கைப்பற்றுமா அல்லது கைநழுவுமா என்ற
கேள்வி கம்பார் மக்களிடையே வினாவி வருகின்றது.
No comments:
Post a Comment