Saturday 5 August 2017

சமூகச் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஆலயங்கள் பணியாற்ற வேண்டும் - டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்


தஞ்சோங் மாலிம்-
இந்து ஆலயங்கள் வெறும் சமயத்தை மட்டும் வளர்க்காமல் சமூக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு தளமாக தன்னை உருமாற்றி கொள்ள வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

இந்து சமயத்திற்கு ஆதாரமாக இருப்பதே ஆன்மீகம் தான். அத்தகைய ஆன்மீகத்தை வளர்த்தெடுக்கும் ஆலயங்கள் மக்களின் சமூகப்பிரச்சினைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நாட்டிலுள்ள பல ஆலயங்கள்  இன்னும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன. அவற்றை களைய வேண்டியது மிக அவசியமாகும்.

ஆலயங்கள் அனைத்தும் தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து மக்களுக்கு வேண்டிய சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்து சமயத்தினரிடையே ஆலயங்கள் மீதான தவறான கண்ணோட்டமும் எண்ணமும் களையப்படும்.


ஆலயங்கள் சமூகச் சேவையை முன்னெடுக்கும் போது மக்களுக்கும் ஆலயத்திற்குமான நல்லுறவு வலுபெறும். அந்த உறவு நீடித்தாலே ஆலயங்களில் நிலவும் பிரச்சினையை மக்கள் தீர்த்து வைக்க முன்வருவர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இங்கு தஞ்சோங் மாலிம், பேராங் ஸ்டேஷனில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின்   12ஆம் ஆண்டு 18ஆம் நாள் திருவிழாவில் தவிர்க்க முடியாத காரணத்தினால் டத்தோஶ்ரீ தனேந்திரன் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழலில் முவாலிம் தொகுதி மமச கட்சி தலைவர் எஸ்.கே. ராவ் அவரின் கருத்தை வெளிபடுத்தினார்.

இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு  ரத ஊர்வலத்திற்கு ஏதுவாக மோட்டார் இயந்திரம் தேவை என ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது.

அவரின் கோரிக்கையை டத்தோஶ்ரீ தனேந்திரன் ஏற்றுக் கொண்ட வேளையில் 8,5000 வெள்ளி மதிப்புள்ள மோட்டார் இயந்திரம் வழங்கப்பட்டது என கிருஷ்ண ராவ் கூறினார்.

இந்த திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சரும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஒங் கா சுவான், ஆலயத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மண்டபம் நிர்மாணிப்பதற்கான முழுச் செலவையும் ஏற்பதாக உறுதி அளித்தார்.

இந்த திருவிழாவில் கலந்து கொண்டு ஆலயத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் நல்லுள்ளங்களுக்கு ஆலயத் தலைவர் டத்தோ பி.எஸ்.நாயுடு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த விழாவில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் எம்.விஜயகுமார், தஞ்சோங் மாலிம் மஇகா தொகுதி இளைஞர் பகுதித்  தலைவர் சுரேஷ் ராவ்உலு சிலாங்கூர் கார் பயிற்சி பள்ளி உரிமையாளர் டத்தோ பி.எஸ்.சாமி, சுங்கை சிப்புட் மலேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் தாஸ் அந்தோணிசாமி உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment