புத்ராஜெயா-
அரசாங்கம் மக்களவையில்
தாக்கல் செய்திருந்த மதமாற்ற சட்ட மசோதா திரும்ப பெறபட்டிருப்பதாக சட்ட அமைச்சர் டத்தோஶ்ரீ
அஸலினா ஒத்மான் குறிப்பிட்டார்.
நாட்டில் பெருமளவில் விஸ்வரூபம் எடுத்த மதமாற்றத்தை தடுக்கும்
வகையில் கடந்தாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மசோதா தற்போது நடைபெறும்
மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
பெற்றோர்   இருவரில்    ஒருவர்,  மற்றவரின்   அனுமதியின்றி   குழந்தையை  மதம்   மாற்றுவதைத்   தடுப்பதற்காக இந்த
சட்ட மசோதா கொண்டுவரப்படவிருந்தது.
சட்டத்   திருத்த (திருமணம்  மற்றும்   மணவிலக்கு)ச்   சட்டம்  1976-இல்  கொண்டுவரப்படும்    திருத்தத்திலிருந்து   பகுதி   88ஏ   நீக்கப்படுவதாக  டத்தோஶ்ரீ  அஸலினா   ஒத்மான்   கூறினார்.
பகுதி  88ஏ  கூறுவது:  மணம்  புரிந்துகொண்ட   இருவரில்   ஒருவர்  இஸ்லாத்துக்கு   மாறினால்,  அவர்களுக்குப்  பிறந்த  குழந்தை    மதமாற்றத்துக்கு  முன்னர்     எந்த  மதத்தைச்  சார்ந்தவர்களாக   இருந்தார்களோ   அதே  மதத்தைச்     சார்ந்துதான்   இருக்க முடியும். இருவரின்  விருப்பத்தின்பேரில்தான்    அதை  மதமாற்றம்    செய்ய  முடியும்.  பிள்ளைக்கு  18 வயதென்றால்    அதன்  விருப்பத்துக்கும்   மதிப்பளிக்க    வேண்டும்.
மதமாற்ற சட்ட 
மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில்   நாளை   சட்டத்   திருத்தச்   சட்டத்துக்கு    புதிய    திருத்த   மசோதா   கொண்டு  வரப்படும்   என   அஸலினா    தெரிவித்தார்.
இச்சட்டத்    திருத்தம்   பல  இனங்களையும்   சமயங்களையும்   கொண்ட   மலேசிய   சமுதாயத்தில்    நல்லிணக்கத்தைக்  காக்கும்    நோக்கில்   கொண்டுவரப்படுவதாக    அஸலினா   கூறினார்.
“அந்த  அடிப்படையில்   அனைவரும்    சட்ட  முன்வரைவுக்கு   ஆதரவளிக்க   வேண்டும்.  அதை    அரசியல்  விவகாரமாக்கக்கூடாது”,  என அவர்   கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment