Thursday 10 August 2017

'புத்தகங்கள் இல்லா கற்றல், கற்பித்தல்' டிஜிட்டல் தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும்



புத்ராஜெயா-

தற்போது நடைமுறையில் இருந்து வரும் புத்தகங்களின் வாயிலான கற்றல் கற்பித்தல் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டே நடத்தப்படலாம் என கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மட்ஸிர் காலிட் தெரிவித்தார்.

முன்னேற்றம் கண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி அமைப்பை கொண்டு செல்லும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் நாடு தழுவிய நிலையில்  சுமார் 10ஆயிரம் பள்ளிகளில் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்படும்.


தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் கற்பித்தல் முறையே மலேசியாவில் கடைபிடிக்கப்படும் என டத்தோஶ்ரீ  மட்ஸிர் காலிட் குறிப்பிட்டார்.

நடப்பு பள்ளி விதிமுறைகளில் பள்ளிக்கூடத்திற்கு கைத்தொலைபேசியை கொண்டு வர மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. கைத்தொலைபேசியின் பயன்பாட்டால் மாணவர்கள் கவனம் சிதறடிக்கப்படலாம்.  எனவே இத்திட்டத்தில் கைத்தொலைபேசியை இணைப்பதற்கு பதிலாக டேப்- லெட்டுகளிஅ அவர்கள் பயன்படுத்தலாம் என  கல்வி துணை அமைச்சர் டத்தோ சோங் சின் வூன் கூறினார்.

எனினும் இந்த திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் குறை நிறைகளை கண்டறிந்த பின்னரே அதனை அமலாக்கம் செய்ய முடியும் என்றார்.
இந்த திட்டம் மிக சிறப்பானது. ஆனால் எல்லா பெற்றோரும் தொழில்நுட்ப கருவியை வாங்குவதற்கு பணபலம் கொண்டவர்களாக் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்.

இந்த திட்டம் அமலாக்கம் காணும்போது ஏழை மாணவர்களும் இதில் சேர்ந்து பயணிக்க வேண்டும். இதில் ஒருவர்கூட பின்தங்கி விடக்கூடாது என மலேசிய கல்வித்துறையின் பெற்றோர் செயல்நடவடிக்கை குழுத் தலைவர் டத்தின் நூர் அஸிமா அப்துல் ரஹிம் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment