சுங்கை
சிப்புட்-
நாட்டில் 529ஆவது தமிழ்ப்பள்ளியாக நிர்மாணிக்கப்படவுள்ள ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டுவிழா
வரும் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
சிறப்பாக நடைபெறவுள்ளது.
மஇகா
தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்,
கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோரின்
தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
பிரதமர்
டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் புதிதாக அறிவித்த 7 தமிழ்ப்பள்ளிகளில்
இந்த ஹீவூட் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும். 12 வகுப்பறைகளை உள்ளடக்கி
12 மில்லியன் வெள்ளி செலவில் இந்த பள்ளிக்கூடம் அமையவுள்ளது.
அனைத்து
நவீன வசதிகளையும் உள்ளடக்கிய இந்த பள்ளிக்கூடம் இங்குள்ள சுற்றுவட்டார மக்களுக்கு வசதியளிக்கும்
வகையில் அமையவுள்ளது என அதன் செயல் நடவடிக்கைக்குழுவின் தலைவர் சொ.தியாகராஜன் குறிப்பிட்டார்.
இந்த
பள்ளிக்கூடம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட வேளையில் இப்பள்ளியின் கட்டுமான
குத்தகை அஞ்சோங் மாஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
5.9 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள இப்பள்ளியின் அருகில் பாலர் பள்ளிக்கூடமும் அமையவுள்ளது
என அவர் மேலும் தெரிவித்தார்.
பள்ளி
அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் தொகுதி மஇகாவைச் சேர்ந்த தலைவர் மு.இளங்கோ,
துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், உதவித் தலைவர்
லெட்சுமணன், சுலைமான், பாஸ்கரன் ஆகியோரை
உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment