Tuesday 15 August 2017
பேராக் மஇகா இளைஞர் பிரிவுக்கு மீண்டும் தலைமையேற்றார் நேருஜி
(ரா.தங்கமணி)
ஈப்போ-
பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக நேருஜி முனியாண்டி மீண்டும் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார்.
தேசிய மஇகா தலைமைத்துவம் கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இப்பதவியினை மீண்டும் ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பணிச்சுமை, குடும்பச் சூழல் ஆகியவற்றின் காரணமாக இப்பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்திருந்தேன். ஆனால் என் தலைமைத்துவத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இப்பதவியை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
மஇகா தலைமைத்துவம் கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எனது பணி அமைந்திருக்கும் எனவும் பேராக் மஇகா இளைஞர் பிரிவை இன்னும் துடிப்புட செயலாற்றுவேன் என நேருஜி கூறினார்.
இவ்வேளையில் என் மீது நம்பிக்கைக் கொண்டு இப்பதவியை வழங்கியுள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ, தேசிய மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நேருஜி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment