Tuesday 6 April 2021

லோரியில் கூடுதல் பளு; உற்பத்தி நிறுவனங்களே முழு பொறுப்பு- டத்தோ சத்யபாலா- டத்தோ சிவநேசன்

ஈப்போ-

லோரியில் கூடுதல் பளுவை ஏற்றுவதால் சாலை போக்குவரத்துத் துறையினர் விதிக்கும் அபராதங்களுக்கு சில லோரி ஓட்டுனர் லோரி நிறுவனங்களை குறை கூறுகின்றனர். ஆனால் உண்மையில் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்களே அதிக பளு ஏற்றுவதற்கு பொறுப்பாளியாகின்றன என்று போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வரும் டத்தோ சத்யபாலா தெரிவித்தார்.

டத்தோ சத்யபாலா      டத்தோ சிவநேசன்

கனரக வாகன நிறுவனத்தை நடத்தி வரும் தன்னிடம் 25 லோரிகள் இருக்கின்றன. ஆயினும் குறிப்பிட்ட நிறுவனங்கள் விதிக்கும்  கட்டுப்பாடுகளாலேயே லோரியில் அதிகமான பளு ஏற்றப்படுகின்றன. 

லோரியில் கூடுதல் பளுவை ஏற்றுவதால் அபராதம் பெறும் ஓட்டுனர்கள் பின்னாளில் பெரும் சிரமத்திற்கு ஆளாவதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் கூடுதல் பளுவை ஏற்ற முடியாது என்று சொன்னால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வேறு போக்குவரத்து நிறுவனத்தை நாடுகின்றன. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என்றார் டத்தோ சத்யபாலா.

கோப்புப்படம் 


அபராதம் பெறுவதிலிருந்து ஓட்டுனர்கள் விடுபட வேண்டுமென்றால் சட்டத்திட்டங்களை பின்பற்றும் தொழிற்சாலையில் வேலைக்கு சேருங்கள். மேலும் கூடுதல் பளுவை ஏற்றச் சொன்னால் அதனை ஓட்டுனர்கள் மறுக்க  வேண்டும் என்று டத்தோ சிவநேசன் கூறினார்.

இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்பட லாபத்திற்காக கூடுதல் ஏற்றுவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையேல் லோரிகளில் அதிக பளுவை ஏற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அதை விடுத்து லோரி ஓட்டுனர்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுவது ஏற்புடையதாகாது என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment