கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக நியமனம் செய்யப்பட மாமன்னருக்கு ஆதரவு கடிதம் வழங்கியது தொடர்பில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடியிடம் கேள்வி எழுப்புங்கள் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காசிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.
தேசிய முன்னணியை விட்டு பிற கட்சிகளுடன் இணைந்து மஇகா செயலாற்றுவதை கேள்வி எழுப்புவதை விடுத்து இவ்விவகாரம் தொடர்பில் ஸாயிட்டுக்கு நெருக்குதல் கொடுங்கள்.
தேசிய முன்னணியில் கலந்தாலோசிக்காமல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரை ஆதரிக்கும் முடிவை யார் எடுத்தது? என்பதற்கு பதிலளிக்க ஹாயிட்டை நெருக்குங்கள் என்று கூறியுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது தலைவரை கேள்வி கேட்கும் துணிச்சல் அவருக்கு (புவாட்) இருக்கிறதா? என்று வினவினார்.
'இந்த முடிவு யாருடையது என்று கேளுங்கள்?, தேமு, அம்னோவில் முடிவு எடுக்கப்பட்டதா? இவ்விரண்டிலும் முடிவு எடுக்கவில்லை என்றால் முடிவு எடுத்தது யார்? என்பது குறித்து கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்ப முடியுமா? என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வினவினார்.
No comments:
Post a Comment