ரா.தங்கமணி
கிள்ளான் -
வரும் பொதுத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மஇகா வென்றால் சமூகச் சேவையில் ஈடுபடும், இல்லையேல் கட்சி உறுப்பினர்களுக்கான சேவையில் மஇகா முனைப்பு காட்டும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மஇகா ஒரு வலுவான கட்சியாகவே திகழ்கிறது. இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக மஇகா மட்டுமே திகழ முடியும் என்ற சூழலில் இந்திய சமுதாயத்திற்கான சேவையை மஇகா என்றுமே புறக்கணித்தது இல்லை.
இன்னும் ஆக்ககரமான திட்டங்களை இந்திய சமுதாயத்திற்கு நிறைவேற்ற மஇகாவுக்கு அரசியல் பலமும் அதிகாரமும் தேவைபடுகிறது. இதற்கு இந்திய சமுதாயம் மஇகாவுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும்.
இந்திய சமுதாயத்தின் பேராதரவோடு வரும் பொதுத் தேர்தலில் மஇகா அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை வென்றால் சமூகச் சேவையில் ஈடுபடுவோம். இல்லையேல் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவையாற்றும் கட்சியாக மஇகா உருமாறலாம். கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உறுப்பினர்களை மஇகா ஒருபோதும் மறந்து விடாது என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment