Sunday 11 April 2021

தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் விடுமுறை வழங்க வேண்டும்- டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு ஏதுவாக தொழிலாளர்களுக்கு அந்நாளில் சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் விடுமுறை வழங்குவதற்கு மனிதவள அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மலேசியர்கள் விடுபடுவதற்கு ஏதுவாக தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தொழிலாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முதலாளிமார்கள் எவ்வித பாரபட்சமுமின்றி விடுமுறை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

தடுப்பூசியை ஒரே நாளில் அனைவரும் செலுத்திக் கொள்ள முடியாது என்பதால் அதற்காக சிறப்பு விடுமுறை அரசாங்கம் அறிவிக்க முடியாது. அதனாலேயே தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment