Saturday 3 April 2021

ஆலய நிர்மாணிப்பு முன்னதாக நிலத்தை சொந்தமாக்குங்கள்

கோ. பத்மஜோதி 

கிள்ளான்,

நாட்டில் விஸ்வரூபம்  எடுத்துகொண்டிருக்கும் ஆலயப்  பிரச்சினைகளுக்கு நிரந்திர  தீர்வுக் காணப்பட  வேண்டுமென்றால், ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் அந்நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்  என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

தனியார் நிலத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்படுவதும் பின்னர் அது உடைபடும்போது மஇகா  என்ன செய்துக் கொண்டிருக்கிறது என சாடுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆலயங்கள் உடைபடும் சம்பவங்களை தவிர்க்க தனியார் நிலத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்படுவது  தவிர்க்கப்பட வேண்டும். 

நாடு  சுதந்திரம் அடக்குவதற்கு முன்னர் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்ட சூழல் வேறு.  ஆனால் இன்றைய காலத்திலும் அனுமதியின்றி ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுவது நமது சமயத்தை நாமே இழிவுபடுத்துவது  போலாகும். 

எனவே,  ஆலய உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று மஇகா திட்டமிட்டுள்ளதாக மஇகாவின் 74ஆவது பொதுப் பேரவையின் கொள்கை உரையின் போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment