ரா. தங்கமணி
கிள்ளான் -
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக உள்ள மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை ஒதுக்குவதை நிறுத்தி விட்டு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் களம் கண்டால் மஇகாவும் தனது வெற்றியை உறுதி செய்யும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எல்லாம் அம்னோ கைப்பற்றி விட்டு, வெற்றி வாய்ப்பில்லாத நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கினால் மஇகா எவ்வாறு வெற்றி பெற முடியும்?
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மஇகா போட்டியிட்டிருந்தால் இந்நேரம் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றத்திலும் மஇகாவின் பிரதிநிதிகள் அதிகமாகவே இருந்திருப்பர் என்று அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment