கோலாலம்பூர்-
போலீசாரின் தடுப்புக் காவலின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தாக நம்பப்படும் ஏ.கணபதியின் மரண விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் இந்திய சமுதாயத்தின்
மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மரணமடைந்த கணபதியின் குடும்பத்தினருக்கு
நீதி கிடைக்கப்பட வேண்டும்.
கணபதியின் மரண விவகாரம் தொடர்பில்
உள்துறை அமைச்சர், போலீஸ் படைத் தலைவர் ஆகியோருடன்
தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.
போலீஸ் துறை மீது மக்கள் நம்பிக்கை
இழக்கும் அளவுக்கு அரங்கேறியுள்ள கணபதியின்
மரண விவகாரத்தை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லவிருப்பதாக கூறியுள்ள
டத்தோஶ்ரீ சரவணன், கணபதியின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
போலீசாரின் விசாரணைக்கு உதவும்
பொருட்டு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்ட கணபதி மார்ச் 8ஆம் தேதிவிடுதலை செய்யப்பட்டார்.
ஆயினும் செலாயாங் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணபதியின் கால்கள் துண்டிக்கப்படட நிலையில்
சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி மரணமடைந்தார்.
No comments:
Post a Comment