Monday 18 May 2020

இரண்டாவது முறை எம்பி பதவியை இழந்த முக்ரீஸ்

அலோர்ஸடார்-
கெடா மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் பதவியிலிருந்து விலகினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான ஆதரவை இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பாஸ் கட்சியை சேர்ந்த  முகமட் சனுஸி முகமட் நோர் புதிய மந்திரி பெசாராக பதவியேற்கவிருக்கிறார்.

மந்திரி பெசார் பதவியிலிருந்து முக்ரீஸ் மகாதீர் வீழ்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கெனவே டத்தோஸ்ரீ நஜிப்புடன் துன் மகாதீருக்கு ஏற்பட்ட பிணக்கு காரணமாக முக்ரீஸ் மந்திரி பெசார் பதவியை இழந்தார்.

No comments:

Post a Comment