Thursday 28 May 2020

கோவிட்-19 பாதிப்பு குறையுமானால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த நிலையில் இருக்குமானால் பள்ளிகள் உட்பட மேலும் பல பொருளாதாரத் துறைகளை திறக்க முடியும் என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஒத்துழைத்து மக்கள் வழங்கிய ஆதரவின் காரணமாக கோவிட் -19 வைரஸ் பரவல் ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருக்கும் சூழலில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து சுகாதாரத்துறை பரிசீலிக்கும்.

10க்கும் குறைவாகவோ அல்லது இப்போது இருக்கும் நிலை நீடித்தாலே பள்ளிகள் உட்பட பல பொருளாதாரத் துறைகளையும் மீண்டும் திறந்து விடலாம் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment