கோலாலம்பூர்-
நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள கோவிட்-19 பாதிப்பு 4 இலக்கங்களை எட்டியுள்ள நிலையில் அவசரகால நிலை அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இன்று மாலை 6.00 மணியளவில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கப்படவுள்ள சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவசரகால நிலை அறிவிக்கபடலாம் என்று கணிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகால நிலை அமல்படுத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மாமன்னரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட்-19 பாதிப்புகள் அதிகம் உள்ள சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் இந்த அவசரகால நிலை அமல்படுத்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுபெறுகின்றன.
No comments:
Post a Comment