Saturday, 3 February 2018
ஆசிரியருக்கு கைப்பேசி கிடைத்திருக்கலாம்; நாங்கள் வசந்தபிரியாவை இழந்து விட்டோமே?- உறவினர் கதறல்
செபெராங் பிறை-
"சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு காணாமல் போன அவருடைய கைத்தொலைபேசி கிடைத்திருக்கலாம். ஆனால் ஒரு குற்றச்சாட்டினால் இன்று பிள்ளையை இழந்து தவிக்கிறோமே" என மாணவி வசந்தபிரியாவின் உறவுக்கார தாயார் ஏ.லலிதா கண்னீர் மல்கக் கூறினார்.
'தொலைபேசி எப்போது வேண்டுமானாலும் கிடைக்கக்கூடியது. மனித உயிர் என்பது அப்படி கிடையாது, ஒருமுறை இழந்தால் திரும்ப பெற முடியாது. ஒரு கைத்தொலைபேசிக்காக சிறுமியை வசந்தபிரியாவை நாங்கள் இழந்து விட்டோமே' என 43 வயதான அவர் கூறினார்.
வசந்தபிரியா எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். சம்பந்தப்பட்ட ஆசிரியை கடுமையாக தண்டித்ததால் மனமுடைந்து வசந்தபிரியா இம்முடிவை எடுத்துள்ளார்.
அவமதிக்கப்பட்ட நிலையில் கோபம் கொண்டதோடு தனது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலைக்கு வசந்தபிரியா தள்ளப்பட்டிருக்கலாம் என திருமதி லலிதா கூறினார்.
வசந்தபிரியாவின் இந்த நிலைக்கு காரணமாக ஆசிரியை மீது போலீஸ் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை கூறிய அவர், இந்த இழப்பு எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என நேற்று செபெராங் பிறை மருத்துவமனை சவக்கிடங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கண்ணீருடன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment