Saturday 10 February 2018

உள்ளூர் விளையாட்டாளர்கள் களமிறங்கும் வல்லவர் சீசன் 4


அஸ்ட்ரோ  விண்மீன் எச்டி அலைவரிசையில் கடந்த முன்று சீசன்களில் இரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்ற வல்லவர் நிகழ்ச்சி, இவ்வாண்டு வல்லவர் சீசன் 4 அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதன் அறிமுக விழா அஸ்ட்ரோவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கி 8 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு  மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆன் டிமாண்ட் மற்றும் அஸ்ட்ரோ கோ விலும் ஒளிப்பரப்படவுள்ளது.


உள்ளூர் கலைஞர் நெவாஷன் கணேசன் இந்நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகிறார். முந்தை வல்லவர் சீசன் நிகழ்ச்சியை தென்ந்திய நடிகர் ரியாஸ் கான் தொகுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை முழுக்க முழுக்க உள்ளூர் விளையாட்டாளர்களைக் கொண்டு நடத்தப்படும் வல்லவர் சீசன் 4-ல் 12 போட்டியாளர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் பல சோதனைகளை கடந்து வல்லவர் சீசன் 4 சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்லும் அரிய வாய்பபுக் காத்துக் கொண்டிருக்கிறது.


செந்தில் குமரன் சில்வராஜு (கராத்தே), சஹாருடின் ஜமாலுதின் (கராத்தே),சந்திரலேல்கா சண்முகம் (கூடைப்பந்து), பிரபுதாஸ் கிருஷ்ணன் (தடகளம்), தீபன் கோவிந்தசாமி (MMA), தினகரன் நாயுடு பாப்புநாயுடு (தேக்வண்டோ), கனகராஜ் பாலகிருஷ்ணன் (டென்னிஸ்), ஆனந்தா கிருஷ்ணன் ராஜேந்திரன் (சிலம்பம்), ரிஷிவர்மா சரவணன் (போர்கலை) மற்றும் கோமதி மாரிமுத்து (போர்கலை) ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கெடுக்கின்றார்கள்.

“பல சவால்களை தட்டி வல்லவர் நிகழ்ச்சி மூன்று சீசன்களைக் கடந்த தற்போது நான்காவது சீசனை எட்டியுள்ளது. இம்முறையை இந்த சவால்மிகுந்த வல்லவர் களத்தில்  12 மலேசிய விளையாட்டு வீரர்களைக் களமிறக்கியுள்ளோம். இந்நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் பல சோதனைகளைக் கடந்து வர வேண்டும். இப்போட்டியில் இறுதியில் ஒருவரே வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதை வேளையில், எங்களின் டிஜிட்டல் வலைத் தளமான அஸ்ட்ரோ உலகத்தில் முதல் முறையாக இந்நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் ரசிகர்களுக்காக போட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்” என்று அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து குறிப்பிட்டார்.


மேலும், ஏப்ரல்1ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் ஒட்டுமொத்த சவால்களை வென்று சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெறும் வல்லவருக்கு முதல் பரிசாக ரிம 50,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு ரிம 40,000, மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு ரிம 30,000 மற்றும் ஆறுதல் பரிசாக ரிம 15,000 ரொக்கமும் வழங்கப்படும். இது தவிர்த்து ஒவ்வொரு வாரமும் வல்லவர் போட்டியில் இருந்து தகுதி இழக்கும் போட்டியாளர்களுக்கு ரிம 5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.


பிப்ரவரி 11-ஆம் தொடக்கம் ஒவ்வொரு ஞாயிறுதோறும் இரவு 8.00 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீண் எச்.டி-யில் ஒளிபரப்படும் வல்லவர் நிகழ்ச்சியைக் கண்டு, பின்னர் இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளைச் சேகரிக்க வேண்டும். பிறகு, அஸ்ட்ரோ  அகப்பக்கத்தை நாடி 8 கேள்விகளின் பதில்களோடு கேட்கப்பட்டிருக்கும் சுலோகத்தையும் பூர்த்திச் செய்ய வேண்டும். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் பதில்களை அனுப்பி வைக்க வேண்டும். மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு Nantha Travel & Tours Sdn. Bhd சுற்றுலா நிறுவனம் வழங்கும் இந்தோனேசியா யோக் ஜாக்கார்த்தா செல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.


மேல் விபரங்களுக்கு ww.astroulagam.com.my/VallavarS4 No comments:

Post a Comment