Tuesday 6 February 2018

வசந்தபிரியா பயின்ற பள்ளி மீது கல் வீச்சு - மர்ம ஆசாமி ஓட்டம்


நிபோங் தெபால்-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மரணத்தைத் தழுவிய மாணவி வசந்தபிரியா பயின்ற இடைநிலைப்பள்ளி மீது மர்ம ஆசாமி ஒருவன் கல் வீசியெறிந்தான்

இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி கற்களை வீசியெறிந்ததை ஆசிரியரும் பள்ளி பாதுகாவலரும் நேரில் கண்டுள்ளனர். ஆயினும் இதில் யாரும் காயமடையவில்லை.

ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் 5 மணி நேரம் தனி அறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா,  வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தார்.

இதனிடையே, மாணவி வசந்தபிரியா மரணத்திற்கு காரணம் என கூறப்படும் ஆசிரியை தற்போது மாவட்ட கல்வி இலாகாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment