Thursday 8 February 2018
தைவானில் நிலநடுக்கம்; 4 பேர் மரணம், 60 பேர் காணவில்லை
ஹூவாலின் -
தைவான், ஹுவாலின் நகரத்தை ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவான நிலநடுக்கம் உலுக்கியதில் 4 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 60 பேர் காணவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட உயரமான சில கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 60 பேர் காணாமல் போயிருப்பதோடு 243 பேர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து ஹுவாலின் மேயர் ஃபூ குன் சீ கூறுகையில், தற்போது வரை 60 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சபடுகிறது.
காணாமல் போனவர்களில் சரிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்ற அவர், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment