Wednesday 7 February 2018
' தாரணியை கொன்றவர் காதலர் கிடையாது'- உறவினர் தகவல்
கோலாலம்பூர்-
ஒரு பெண்ணை கொன்று அவரது உடலைன் காரின் முன் இருக்கையில் கிடத்தி போலீசில் சரணடைந்த ஆடவர் அவருடைய காதலர் அல்லர் என மரணமடைந்த பெண்ணின் உறவினர் கூறினார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த டி. தாரணியை கொன்ற 37 வயதுடைய இந்திய ஆடவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ஆவார்.
'ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் இருவரும் காதலர்கள் அல்லர். தாரணி யாரையும் காதலிக்கவில்லை. அவர் விடுமுறை நாட்களில் கூட வெளியே யாருடனும் செல்ல மாட்டார். செல்லப் பிராணியான 4 நாய்க்குட்டிகளுடனே அவர் பொழுதை கழிக்கவே விரும்புவார்' என உறவினரான மலர்
தெரிவித்தார்.
கோத்தா டாமன்சாராவிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் தாரணியை கூர்மையான ஆயுதத்தால் அவ்வாடவர் குத்தி கொலை செய்துள்ளார் என்று தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஸானி சே டின் தெரிவித்தார்.
பொறாமையின் காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற அவர், தன்னுடைய காதலியை கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொன்றதாக டாமன்சாரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தபோது அவ்வாடவர் போலீசிடம் கூறியதாக அவர் சொன்னார்.
டாமன்சாரா பகுதியிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி நிறுவனம் ஒன்றில் இருவரும் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர் எனவும் கடந்த இரண்டாண்டுகளாக அவ்விருவரும் காதலர்களாக இருந்து வந்துள்ளனர் எனவும் முகமட் ஸானி கூறினார்.
இதனிடையே, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் திரண்டிருந்த உறவினர்கள், தாரணிக்கு காதலர் என்று யாருமே கிடையாது என உறுதியாக கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment