Monday 5 February 2018
வசந்தபிரியா விவகாரம்; டேவிட் மார்ஷல் மீதான போலீஸ் புகார் அரசியல் நோக்கமானது- பேராசிரியர் இராமசாமி
பட்டவொர்த்-
14 வயது மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் போலீசாரின் நடவடிக்கையை விமர்சித்த செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷல் மீது வலைப்பதிவாளர் ஒருவர் போலீஸ் புகார் செய்திருப்பதை பினாங்கு மாநில துணை முதல்வர் பி.இராமசாமி வன்மையாக சாடினார்.
வலைபதிவாளர் ராஜ்விந்தர் சிங் ஜெஸ்ஸியின் இந்த நடவடிக்கை வெறும் பிரபலம் அடைவதற்காக செய்யப்பட்ட ஒன்று என சாடிய அவர், அரசியல் நோக்கத்தால் இது செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
'மாணவி வசந்தபிரியா விவகாரம் அரசியல் அல்ல. இதை ஒரு துயர சம்பவமாகவே ஒட்டுமொத்த சமூகமும் பார்க்கிறது.'
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசந்தபிரியாவின் மரணத்தை கொலையாக விசாரிக்காமல் தற்கொலை விசாரணையாக முடிக்க நினைப்பது தொடர்பில் டேவிட் மார்ஷல் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்திருந்தார்.
மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவருமான டேவிட் மார்ஷல், மாணவி வசந்தபிரியாவின் குடும்பத்தினருக்கு தொடக்கம் முதலே உதவி செய்து வருகின்ற நிலையில் அவர் மீதான போலீஸ் புகார் அர்த்தமற்ற ஒன்று என பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment