Tuesday, 13 February 2018

கைத்தொலைபேசியை திருடினார் மாணவி; சிசிடிவி கேமராவில் பதிவு


நிபோங் தெபால்-
தொற்கொலைக்கு முயற்சித்த இரண்டாம் படிவ மாணவி ஆசிரியரின் கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சிசிடி) பதிவு செய்யப்பட்டுள்ளது  போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்த போலீசார், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்பதால் இது குறித்து மேலும் கருத்துரைக்க மறுத்து விட்டனர்.  விசாரணை முடிவு வரும் வரையிலும் அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியை கண்ட பின்னரே மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் மூண்ரு விசாரணை அறிக்கைகளை பொது துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆயினும் சாட்சிகளின் கூடுதல் தகவல்களை பதிவு செய்யும் வகையில் அவ்வறிக்கைகள் போலீசாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் 4 ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அம்மாணவி ஜனவரி 24ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை முயற்சிக்கு முயன்ற வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தார்.

No comments:

Post a Comment