Thursday, 22 February 2018

ஜாலோங் தொகுதி; வேட்பாளராக டத்தோ டான் களமிறக்கப்படுவார்- கெராக்கான்



சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ஜாலோங் சட்டடமன்றத் தொகுதியின் வேட்பாளராக டத்தோ டான் லியான் ஹோ களமிறக்கப்படுவார் என கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ மா ஹாங் சூன் தெரிவித்தார்.

ஜாலோங் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து இங்கு சேவையாற்றி வரும் கெராக்கான் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவியுமான டத்தோ டான், இங்குள்ள மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பதோடு தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெறுவதற்கு அவரே சிறந்த வேட்பாளர் எனவும் டத்தோ மா கூறினார்.

ஜாலோங் தொகுதி தற்போது எதிர்க்கட்சி வசம் உள்ள நிலையில் அதனை மீட்டெடுப்பதற்கு டத்தோ டான் களப்பணி ஆற்றி வருகின்றார் என்பதோடு அவர் வேட்பாளராக களமிறங்குவதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பும் பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரியும் உறுதி செய்வர் என இங்கு நடைபெற்ற பேராக் மாநில அளவிலான சீனப்புத்தாண்டு உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment