Friday, 2 February 2018
கைத்தொலைபேசி களவு; சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் வசந்தபிரியா
நிபோங் தெபால்-
ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போன விவகாரம் தொடர்பில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இடைநிலைப்பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.
நிபோங் தெபாலில் உள்ள இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயின்று வந்த மாணவி வசந்த பிரியா, ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விசாரணை நடத்தப்பட்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்த அம்மாணவி, வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை காப்பாற்றி செபெராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே, அம்மாணவி இன்று அதிகாலை 3.30 மணியளவில் மரணமடைந்தார் என மலேசிய தமிழர் குரல் இயக்கத்தில் தலைவர் டேவிட் மார்ஷல் சமூக ஊடகத்தின் வாயிலாக தகவலை உறுதிப்படுத்தினார்.
மாணவி வசந்தபிரியாவின் மறைவுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக பலர் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment