Thursday 1 February 2018

வானில் தோன்றியது 'சந்திர கிரகணம்'


கோலாலம்பூர்-
சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது நிகழுல் 'சந்திர கிரகணம்' இன்று வானில் ஏற்பட்டது.

5 மணி நேரம் நீடிக்கவிருக்கும் இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் ஆசியா (மலேசியா), கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் காண முடியும்.

மலேசியாவில் இரவு 9.29 மணிக்கு நிகழ்ந்துள்ள இந்த சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது. "சந்திர கிரகணம் நிகழும் வேளையில், நிலா இரத்தச் சிவப்பு நிறத்திற்கு மாறும். அந்த 5 மணி நேரத்திற்கு பின்னர், அதன் நிறம் மீண்டும் வெண்மை நிறத்திற்கு மாற்றம் காணும்" .

152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த முழு சந்திர கிரகணத்தில் தோன்றும் நிலா 'நீல நிலா' என்றழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment