Wednesday 11 October 2017

கல்வி ஒன்றே இன்றைய தலைமுறையின் பலம்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
கல்வி ஒன்றே இன்றைய தலைமுறையின் பலம். கல்வி மட்டும் இல்லாவிட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என காவல் துறை அதிகாரி ஏசிபி  புஸ்பநாதன்  கூறினார்.

வறுமை நிலையிலும் பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு தரும் மிக பெரிய சொத்து கல்வியாகும்.  அதனை நன்கு புரிந்து கொண்டு  இன்றைய இளம் தலைமுறையினர் கல்வியில் முழு  கவனத்தை செலுத்தி சிறந்து விளங்கவேண்டும்.
நமது சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்கி பல துறைகளில் காலூன்ற வேண்டும். அப்போதுதான் நமது சமுதாயத்தின் வாழ்வாதாரம் சிறப்பான முறையில் மேம்பாடு காணும்.

கல்வி மட்டும் இல்லையேல் நமது சமுதாயம் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் நன்கு உணர வேண்டும் என இங்கு பண்டார் பாரு கொமுனிட்டி மண்டபத்தில் உலு கிந்தா நாகா விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஏசிபி புஸ்பநாதன்  இவ்வாறு வலியுறுத்தினார்.
வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கும் உலு கிந்தா நாகா  விளையாட்டு மன்றம் இது போன்ற சேவைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும் என்ற அவர்,   ஏற்பட்டு குழுத் தலைவர், அவர்தம் செயலவை உறுப்பினர்களை வெகுவாக பாராட்டுவதாக கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இயக்கத்தின் தலைவர் கமலநாதன்,  இம்மன்றம் 2012இல் பதிவு பெற்று 3ஆவது ஆண்டாக வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி வருவதாக  குறிப்பிட்டார்.

முன்னாள் ஏஎஸ்பி கந்தசாமி, ஏஎஸ்பி குமார்  ஆகியோரின் ஆதரவோடு நடைபெற்ற இன்றைய நிகழ்வில் 40 வசதி குறைந்த குடும்பங்களுக்கு யாயாசான் பினா உபாயாவின் உதவிப் பொருட்களும் பனமுடிப்பும் கைலியும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment