கோலாலம்பூர்-
நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்கு லஞ்ச ஊழலில் சிக்கும் தனிநபர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை டத்தோ அம்பிகா சீனிவாசன் முன்மொழிந்திருக்கிறார்.
அதிகளவில் பெருகி வரும் இத்தகைய குற்றத்தை தவிர்ப்பதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். மலேசியர்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாகி விட்ட லஞ்சம், அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதனை தடுப்பதற்கு ஏதுவாக லஞ்ச ஊழலில் சிக்குபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு, முறைகேடாக சம்பாதித்த சொத்துகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கலாம் என தம்முடைய பொது மன்னிப்பு ஆலோசனை திட்டத்தை அவர் விவரித்தார்.
லஞ்சம் ஒரு தவறான செயல் என்பதையே மலேசியர்கள் மறந்து விட்டனர். லஞ்ச ஊழலில் சிக்கும் தனிநபர்கள் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு முறைகேடாக சம்பாதித்தவற்றை திரும்ப ஒப்படைக்க முன்வந்தால் அவர்களுக்கென பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. கீழ் நிலையில் உள்ள மக்களும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு என மனித உரிமை போராட்டவாதியும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசன் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment