பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ள பட்ஜெட் 2018 அடிமட்ட மக்களின் நலனை பிரதிபலிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா சாடினார்.
இந்த பட்ஜெட் 14ஆவது பொதுத் தேர்தலில் பிரபலமடைய வேண்டும் என்பதற்கான முயற்சியே ஆகும். மக்களின் வாழ்வாதாரத்தை காக்கக்கூடிய எத்தகைய நலத்திட்டங்களும் இதில் உள்ளடங்கவில்லை.
இன்றைய மக்களின் வாழ்வாதார நிலையை பிரதமர் நஜிப் உணர்ந்திருக்கவில்லை. மிக குறைந்த நிலையிலான வருமானத்தை பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளன.
குறிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் மக்கள் பல்வேறு சுமைகளுக்கு ஆளாகின்றனர். மக்கள் நலனை காக்கக்கூடிய இந்த பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமாக என்ன உள்ளனது என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் நலனை பாதுகாக்காத பட்ஜெட்டாகவே இது உள்ளது என பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஶ்ரீ வான் அஸிஸா குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment