Saturday 21 October 2017

இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது தேமு- டத்தோஶ்ரீ தனேந்திரன்

சுகுணா முனியாண்டி 

பட்டர்வொர்த்-
இந்திய மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரியது தேசிய முன்ணணி அரசாங்கம் மட்டுமே. இதனை பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் அதிக கடப்பாடாக கொண்டுள்ளார். அதை நாம் உணர்ந்து தேமுவுக்கு பேராதரவை வழங்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின்  தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.
பினாங்கு மாநில மலேசிய மக்கள் சக்தி கட்சியின்  தீபாவளி  விருந்து அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் இங்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் உரையாற்றியல்  டத்தோஶ்ரீ தனேந்திரன்,  நாட்டின் பிரதமர்  இந்திய மக்களுக்கு  அதிகமாக செய்து வருகின்றார். கல்வி பொருளாதரம் என பல  ஆக்கப்பூர்வ திட்டங்களை வகுத்து செயல்படுத்தியும் வருகின்றார்.
ADVERTISEMENT 

கடந்த 10 ஆண்டுகாலமாக தேசிய முண்ணனிக்கு  வற்றாத ஆதரவை வழங்கி வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சி, வரும் காலங்களிலும் தேமுவை ஆதரிக்கும். இது வெற்று வாக்குறுதி அல்ல என  அவர் தமதுரையில் கூறினார்.

இவ்வாண்டு மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் மது இல்லாத தீபாவளியாக நாம் கொண்டாடுவோம் ,பெருநாள் காலங்களில் சந்தோஷமாக குடும்பத்தினருடன் கொண்டாடும் அதேவேளை சச்சரவு இல்லத அமைதியான தீபாவளியாக நாம் கொன்டாட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வசதி குறைந்தவர்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஆடல் பாடலுடன் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனிச்சல் வெட்டிக் கொன்டாடினர். இந்நிகழ்வின் போது பிரமுகர்களுக்கு மால பொன்னாடை அணிவித்து சிறப்பிக்க்ப்பட்டனர்.
ADVERTISEMENT

பினாங்கு மாநில மக்கள் சக்தி கட்சி  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன், மாநில கெரக்கான் தலைவர் தெங் சாவ் யாவ், இராமகிருஷ்ண மாணவர்கள், மக்கள் சக்தி கட்சியின் பினாங்கு மாநில தலைவர் உட்பட பினாங்கு மாநில கட்சி செயலவையினர், உறுப்பினர்கள் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment