Monday 2 October 2017

மஇகா வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிப்பு- டத்தோஶ்ரீ சுப்ரா

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் களமிறக்கப்படும் வேட்பாளர் பட்டியலை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் மஇகா சமர்பித்துள்ளது என கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் சில வேட்பாளர்களின் பெயர்கள் பிரதமரின் தேர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் இளம் வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்காக புதுமுக வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மீது மஇகா முழு கவனத்தையும் செலுத்தும் அதே வேளையில் தேமு சார்பில் ஒரே சீரான வேட்பாளர்கல் இடம்பெற வழிவகை காணப்படும்.

மஇகா சமர்ப்பித்திருக்கும் வேட்பாளர் பட்டியலை தேமு தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் அங்கீகரிப்பார் என எதிர்பார்க்கின்றோம். இதற்கு பின்னர் இந்த பட்டியல் மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வேட்பாளரின் பின்னணி குறித்து ஆராயப்படும் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment