Monday 9 October 2017

மக்களுக்கு சேவையாற்றுபவர்களை வேட்பாளர்களாக களமிறக்குங்கள்- டத்தோ எம்.சம்பந்தன்

செர்டாங்-
மக்களுக்கு உதவுபவர்களையே வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்குங்கள். அதுதான் நாளைய சமுதாயத்திற்கு ஆக்ககரமாக அமையும் என  அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் வலியுத்தினார்.

மக்களுக்கு களமிறங்கி பணியாற்றுபவர்களே இப்போது தேவை. தனிபட்ட அபிலாஷைகளை கொண்டு வேட்பாளராக களமிறங்கும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை விட வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும். அந்த வேட்பாளர் மக்களுக்கு களமிறங்கி சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்படும்.

இளைய சமுதாயம் நம்மை ஆதரிக்க வேண்டுமானால் நாம் (தேமு) அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.  இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு தேவையான வியூகங்களை வகுத்து தேர்தலில் களமிறங்கினால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என இங்கு மேப்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஐபிஎப் கட்சியின் 25ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் செனட்டருமான டத்தோ சம்பந்தன் கூறினார்.

ஐபிஎஃப் கட்சியின் 25ஆவது பேராளர் மாநாட்டை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்மாக நிறைவு செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment