Sunday 1 October 2017

29 சிறு தொழில் வர்த்தகர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு


ஸ்ரீகெம்பாங்கான் அக்1-
சிறு தொழில் வர்த்தகர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் எஸ்.எம்.பி எனும் சிறு தொழில் வர்த்தகர்களுக்கான விருது விழா மிக சிறப்பாக அண்மையில் ஸ்ரீ கெம்பாங்கான், பெலாஸ் அஃப் கோல்டன் ஹோர்ஸில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு மலேசிய இந்திய வர்த்தகர் வலையமைப்பு (1மைன்) சங்கத்தின் தலைவர் டத்தோ கோபிநாத், இயக்குநரும் தயாரிப்பாளருமான சி.குமரேசன், ஏ.கே.எஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ ஏ.கே.எஸ். சக்திவேல், பெலாஸ் அஃப் கோல்டன் ஹோர்ஸின் மூத்த இயக்குனர்  மணிராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு வருகையாளித்தனர்.


இந்த விருது விழாவை ஒவ்வொரு ஆண்டும் விவி கிரேண் எண்டர்டெண்மட் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு 6ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்வதில் பெருமைக்கொள்வதாகவும் இது இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும் என்று இந்நிகழ்வின் ஏற்பாடு குழுத் தலைவர் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.


மேலும், 29 சிறு தொழில் வர்த்தகர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வர்த்தகத்தில் எதிர்க்கொண்ட சாவல்களை காணொளியாக வருகையாளர்களுக்கு ஒளிப்பரப்பட்டது.


இந்தியர்கள் வர்த்தகத்தில் சிறப்பான முறையில் வளம் வரவேண்டும். முறையான வர்த்தாக செயல் திட்டங்கள் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வர்த்தகத்தில் புதுமைத்துவத்தையும் உருமாற்றத்தைவும் கொண்டு வரவேண்டும். வர்த்தகத்தில் முறையாக அணைத்து பத்திரங்களும் இருந்தால் அரசாங்கம் உங்களின் வர்த்தகத்திற்கு துணை புரிவார்கள் எனவும் வாழ்க்கையே சரியாக திட்டமிட்டு வர்த்தகத்தில் வளம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் எனவும் டத்தோ கோபிநாத் தலைமையுரையில் தெரிவித்தார்.


No comments:

Post a Comment