Friday 16 June 2017

'ஆர்.ஐ.பி.' அனுதாபம் அல்ல; சமூக சீர்திருத்தமாக வேண்டும்!



கடந்த ஒரு வாரமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நவீனின் மரணச் செய்தி ஒட்டுமொத்த மலேசியர்கள் மட்டுமின்றி உலக வாழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நவீனின் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் 'ஆர்..பி. நவீன்' என்ற வாசகம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு 'ஆர்..பி.' எனும் மூன்றெழுத்து ஓர் அனுதாபமாக மட்டும் பகிரப்படாமல் சமூக சீர்திருத்தத்திற்கான அச்சாரமாக அமைந்திட வேண்டும்.

'பகடிவதை' என்பது நான்கு பேரின் கேலிக்கூத்துக்கு அரங்கேற்றப்படும் நகைச்சுவை நாடகம் அல்ல. மாறாக சமூகத்தில் இன்னமும் கரைபுரண்டோடும் அவலத்தின் கோலம் என்பதை நவீனின் மரணம் எடுத்துரைத்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே மேலோங்கி நிற்கும் குண்டர்தனம், ஒரு கொடூரத்தின் வீரியத்தை அறியாத பருவம், பள்ளி பருவத்திற்கு பின்னர் நிர்ணயிக்கப்பட வேண்டிய வாழ்வாதாரம், பெற்றோரின் கவனிப்பு இல்லாமை போன்ற பல்வேறு விவகாரங்கள் கவனிக்கப்பட வேண்டிவை என்பதை உணர்த்துகிறது நவீனின் மரணம்.

'ஆர்..பி.' என்ற ஒற்றை அனுதாபத்தால் சமூகத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படபோவதில்லை. இங்கு நமக்கு தேவை 'ஆர்..பி.' என்ற அனுதாபம் அல்ல; சமூகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தம் ஆகும்.

ஆகவே, இன்றைய ஒருநாள் சமூக ஊடகங்களின் பயனர்கள் தங்களது  முகப்பு படத்தில் (Profile Picture)   நவீனின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள்.


இது 'பகடிவதை உயிரையும் பறிக்கும்  வீரீயம் கொண்டது; வீரீயம் எல்லை மீறினால் சட்டத்தின் முன் குற்றவாளியாக தண்டிக்கப்பட நேரிடும்' என்ற அச்சத்தை அனைவரிடத்திலும் பதிவு செய்யும் ஒரு முயற்சியே ஆகும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இம்முயற்சியை கையிலெடுப்போமா

No comments:

Post a Comment