Saturday 24 June 2017

அரசு இலாகா அலுவலகங்களுக்கு சுங்கை சிப்புட் மஇகாவின் நோன்பு அன்பளிப்பு



சுங்கை சிப்புட், ஜூன் 24-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சுங்கை சிப்புட் மஇகாவினர் அரசு அலுவலங்களில் நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கினர்.


அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய மலேசிய நாட்டில் நீடித்திருக்கும் மத நல்லிணக்கத்தையும் சகோதரத்தன்மையையும் வலுபடுத்தும் வகையில் இந்த நோன்புப் பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்று தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து குறிப்பிட்டார்.


முஸ்லீம் அன்பர்களிடையே நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதோடு மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் அரசு இலாகா அதிகாரிகளுக்கு நன்றியை புலப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நோன்புப் பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காவல் துறை, பொது மருத்துவமனை, தீயணைப்புப் படை, மாவட்ட நில அலுவகம், சமூக நல இலாகா ஆகியவை உட்பட பல இலாகாவுக்கு வழங்கப்பட்டன.


நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தொகுதி செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்துக் கொண்டார்.



இந்நிகழ்வில்  பொருளாளர் தங்கவேலுகிளைத் தலைவர்கள்  இளங்கோ, பெரியண்ணன், நாராயணன், இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment